என் அவள் அழகு
சிறு பொட்டழகு.
அவள் காலோடு தினம்
காதோடு கவிபாடும் -அவள் .
கம்மல் அழகு .
கையிரண்டில் விளையாடும்-அவள்
வளையல் அழகு .
என்னை கண்டதும் செயல்லிழகும்-அவள்
இமைகள் அழகு .
இன்சொற்கள் மட்டும் சிந்தும் - அவள்
இதழ்கள் அழகு.
இதழ் விரியா தாமரையோ! -அவள்
கண்ணம் அழகு.
"இனிமையே செய்வோம்" எனும்- அவள்
எண்ணம் அழகு .
வர்ணிக்க வார்த்தையில்லை - அவள்
ஓர் பேரழகு .
மறுக்கவில்லை உருகிவிட்டேன்-நான்
தீ முன் மெழுகு!!!!!
இவன்
வெங்கடேஸ்வரன் .க

No comments:
Post a Comment