Sunday, February 20, 2011

one side love 12


மேகம் எல்லாம் ஓடும்
             நான் உன்னை தேடும் போது
அவையாவும் ஒன்றாய் இணையும்
              நான் உன் இருப்பிடம் அறியும் போது
அவையாவும் வானவேடிக்கை நடத்தும்
             நான் உன்னை பார்க்கும் போது
அவையாவும் கண்ணீர் சிந்தும்
              இவையாவும் கணவு என்ற போது ..............

உன்னை காண்பது என்பதே கணவாய் போகுமோ ??????????????

one side love 11

என் காதல் ஒன்றும்
                   மேகம் அல்ல
காலம் கடந்ததும் களைந்து செல்ல
என் காதல் ஒன்றும்
                    தென்றல் அல்ல
பல பூக்களை தழுவி செல்ல
என் காதல் ஒன்றும்
                   நாரை அல்ல
ஓடை வறண்டதும் நிங்கி செல்ல
என் காதல் ஒன்றும்
                விழிகள் அல்ல
கண்ணும் யாவர்க்கும் தன்னில் இடம் கொடுக்க
என் காதல் சொல்ல
               உவமை இல்லை
அது என்றும் உன்னையே நினைத்திருக்கும்
என் உடலோடு உயிராய் கலந்திருக்கும்  

one side love 10

கண் இருந்தும்
                 குருடன் நான்
பேச தெரிந்த
                 ஊமை நான்
உயிர் இருந்தும்
                 இறப்பேன் நான்
அறிவு இருந்தம்
                  மூடன் நான்
ஆசை இருந்தும்
                   புத்தன் நான்
என்னெனில்,
காதல் சொல்லா
                  காதலன் நான் ...................

one side love 9

கண்களால் என்னிடம் பேசினாய்
காலம் போனதும் கலைந்து சென்றாய்
எவ்வித அறிவிப்புமின்றி பிரிந்து சென்றாய்
எதுவும் அறியாதது போல் சிரித்து சென்றாய்
என் மனம் கொண்ட கடும் கணம்
உன் வரவை எதிர்பார்க்கும் எந்தன் மனம்
உன்னை பற்றி பிறர் பேசும் போது
சிறிதும் கலங்காமல் கேட்கும் என் காது
உன்னை பிறர் கண்டதாய் கூறும் வேலை
உன்னிலை கேட்டு அதை
                கண்முன் நிறுத்துவேன் கணவுவேலை................

one side love 8


உன்னிடம் பிறர் பேசியதாய்
                                கூறும் போது
தன்னியலாமை எண்ணி
                                 வருந்தும் என்னிதயம்
உன்னை நினைத்தால் உருகும்
                                  என் உள்ளம்
என்னை அறியாமல் பெருகும்
                                   விழி வெள்ளம்
கண்டும் காணாமல் நீ என்னை
                               கடக்கும் போது
நான் மெல்ல போவேன் என்
                                உயிரை இழந்து
மனதிலே உள்ள காதல் வலி
விழிகளில் உள்ள கண்ணீர் துளி
இவை துடைக்க வாருவாய
                              எந்தன் காதலி ....................

one side love 7

நீ வந்தால் பூக்கும் என் நந்தவனம்
நீ இல்லாமல் வாழும் நான் நடைபினம்
உயிர் உள்ள வரை உடல் வாழும்
உன் நினைப்புள்ள வரை என் உயிர் வாழும்
நான் விரும்பும் ஒரு வாழ்கை
அதை தர வேண்டும் உன் ஒரு வார்த்தை
வைத்திருகிறேன் ,
                     என் இதய வாசலை திறந்து
காத்திருக்கிறேன் ,
                    உன் வரவை எதிர்பார்த்து.............

one side love 6


என் கண்கள் எப்பொழுதும்
                             உன்னை பார்க்கும்
உன் கண்கள் எப்பொழுதாவது
                              என்னை பார்க்கும்
இருகண்களும் இணையும் நேரம்
இதயத்தில் பனிமலை தூரும்
இரு நோடி மேல்
                     இது நிலைப்பதில்லை
இருந்தும் என் மனம்
                   இதை மறப்பதில்லை 

one side love 5

பனியின் மீதான
                பரிதியின் காதலும்
நிலவின் மீதான
                 கடலலையின் காதலும்
விண்மீன் மீதான
                  மின்மினியின் காதலும்
என்றும் சேர்வதில்லை
இருந்தும் ஓய்வதில்லை
அதுபோல நானும்
காத்திருக்கும் என் வாழ்வும் .............

one side love 4

நிலவின் மீது காதல் கொள்ளும் கடலலையோ
                                 வான் நோக்கி துள்ளும்
அதை அறியாமலே நிலவு
                                 திசைமாறி செல்லும்
அலைகளின் காதல்
                        நிலவு அறியாது
அறிந்தாலும் இரண்டும்
                      என்றும் இணையாது
இருபினும் அலைகளுக்கு ஒரு
                               நல் நம்பிக்கை
கடலுடன் வாழ்கிறது ஒரு
                            கணவு வாழ்க்கை ................

one side love 3

மீன்தான் நீரின்றி வாழாது
       நீர் என்றும் மீன் எண்ணி வருந்தாது
மீன்னின் ஆவல் நீர் அறியாது
       எந்தன் ஆவல் நீ அறியாதது
இருவரின் நிலையுமே ஒன்று
வாழ்கிறோம்
         ஒரு நாள் வெளிவரும் என்று .......

one side love 2

நீ நான் ஆனால்
நான் நீ ஆனால்
இது மட்டும் உண்மை ஆனால்
இன்பம் மட்டும் உன்
                   உள்ளம் சேரும்
உவகை மட்டும் உன்
                  உடமை ஆகும் .................

one side love 1


உன் அருகில் நான் இல்லை
என் அருகில் நீ இல்லை
நம் இடையில் எந்த தொடர்பும் இல்லை
இருந்தும் நாம் பிரிவதில்லை ................

one side love

ஒரு சொல்லும் நீ
                         சொல்ல வேண்டாம்
ஒரு முறையும் என்னை
                         நினைக்க வேண்டாம்
ஒரு முறையும் கை
                        சேர்க்க வேண்டாம்
எப்போதும்
உன்னை நான் பார்க்கும் போதும் மட்டும்
                     நீ புன்னகை பூத்தால் போதும் ..........................